தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு + "||" + India's COVID19 case tally crosses 49-lakh mark with a spike of 83,809 new cases & 1,054 deaths in last 24 hours.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49.30 லட்சமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,809-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,  1,054- பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 30 ஆயிரத்து 237- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 90 ஆயிரத்து 061-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 38 லட்சத்து 59 ஆயிரத்து 400 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 776- பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 86,961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.