உலக செய்திகள்

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்- உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் + "||" + Not enough Covid vaccine for all until 2024, says biggest producer

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்- உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள்

உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்-  உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள்
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.
லண்டன்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி, உலகில் உள்ள அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி போடுவதற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காது என்று எச்சரித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, கூறியதாவது:-

மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இல்லை.

கொரோனாவுக்கு  இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1500 கோடி தேவைப்படும் 

 35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இது உலகில்  அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக  உலகம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை, ”

மேற்கு இந்திய நகரமான புனேவை மையமாகக் கொண்டு, செயல்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது, அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2. செப்டம்பர் 24: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்
செப்டம்பர் 24: தமிழ்கத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு;
3. ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்
அரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.
4. வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
8 கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
5. கொரோனா பாதிப்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்
கொரோனா பாதிப்பால் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணடைந்தார்