மாநில செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு - பணிகளை முடித்தது கல்வித்துறை + "||" + Curriculum from 1st to 12th class Significant reduction Completed tasks Department of Education

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு - பணிகளை முடித்தது கல்வித்துறை

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு - பணிகளை முடித்தது கல்வித்துறை
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. 

இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அண்மையில் தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை தற்போது தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.