மாவட்ட செய்திகள்

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் + "||" + in Chennai Woman struck by electricity The incident resulted in the deaths Electricity officers 2 persons Suspended

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன்,  இளநிலை பொறியாளர் வெங்கட ராமன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விவரம்:-

சென்னை புளியந்தோப்பு, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா (வயது 45). இவருடைய கணவர் ஷேக் இப்ராகிம். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அலிமா தனது கணவரையும், மகனையும் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அலிமா, வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார்.

நேற்று காலை வீட்டு வேலை செய்ய நாராயணசாமி தெருவில் அலிமா நடந்து சென்று கொண்டிருந்தார். சென்னையில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால் அந்த தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் பூமிக்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயர், வெளியே தெரியும்படி இருந்தது.

மழைநீரில் நடந்து வந்த அலிமா, இதனை கவனிக்காமல் பூமிக்கு அடியில் சென்ற மின்சார வயரை மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலானது. இதை பார்த்தவர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பலியான அலிமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அங்கு வந்த சென்னை மாநகராட்சி மற்றும் மின்சார வாரிய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே தெருவில் மின்கசிவு ஏற்பட்டு 2 பேர் பாதிக்கப்பட்டதால் பூமிக்கு அடியில் செல்லும் மின்வயரில் ஏற்படும் மின் கசிவை சரி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தோம். ஆனால் அவர்கள் புகாரை பெறாமல் மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்கும்படி கூறினர். இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தபோது அவர்களும், இது மாநகராட்சிக்கு உரிய வேலை என்று தட்டிக்கழித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு-சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெயரிலேயே போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது
2. வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
பல இடங்களில் தேடியும் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
3. உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ‘என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்- வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.
4. சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்துள்ளது.