தேசிய செய்திகள்

பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் + "||" + Centre approves establishment of new All India Institute of Medical Sciences at Darbhanga in Bihar

பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாட்னா, 

பீகாரில் உள்ள தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1264 கோடி செலவில் கட்டப்படும் இந்த எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகம், மத்திய அரசு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 48 மாத காலத்திற்குள் முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் திறன் கொண்ட ஒரு மருத்துவமனை இருக்கும், அதில் அவசர படுக்கைகள், ஐ.சி.யூ படுக்கைகள், ஆயுஷ் படுக்கைகள், தனியார் படுக்கைகள் மற்றும் சிறப்பு மற்றும் சூப்பர் சிறப்பு படுக்கைகள் ஆகியவை அடங்கும். மேலும் ஒரு நாளைக்கு வெளி நோயாளிகள் 2 ஆயிரம் பேரும், உள் நோயாளிகள் மாதத்துக்கு 1000 பேரும் சிகிச்சை பெறலாம். புதிய எய்ம்ஸில் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 60 பி.எஸ்.சி (நர்சிங்) இடங்கள் இருக்கும். மேலும் 15-20 பல்நோக்கு மருத்துவ துறைகள் இருக்கும். முதுநிலை மருத்துவ படிப்புகளும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள்: காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
2. கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க பரிசீலனை - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்
கர்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க பரிசீலித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
3. பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடக்கம்
பீகாரில் 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளன.
4. பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.
5. பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.