மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து + "||" + Online games are detrimental not only to the youth but also to the children - Chennai High Court opinion

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை, 

ஆன்-லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை கோரிய வழக்கில் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.