மாநில செய்திகள்

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + Chief Minister Edappadi Palanisamy has ordered to open water from Thirumurthy Dam from tomorrow

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி, உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் பூசாரிநாயக்கன் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம், பூசாரிநாயக்கன் ஏரிப் பாசனத்திற்குத் திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல் நாளை முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு நடத்தினார்.
2. 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு
20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
3. இ-பாஸ் நடைமுறை ரத்து ஆகிறது; தமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் ஓடும் - புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடும் என்றும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வணிக வளாகங்கள், பெரிய கோவில்களை திறக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
4. திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
திருமூர்த்தி அணையில் இருந்து வருகின்ற 28-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. கொரோனா பாதிப்பு எதிரொலி: நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை மார்க்கெட் மூடப்படுகிறது
வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் மும்பை, நவிமும்பையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.