தேசிய செய்திகள்

ஊதியக் குறைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம் + "||" + Lok Sabha passes bill to cut salaries of MPs by 30 per cent

ஊதியக் குறைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

ஊதியக் குறைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். 

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.
2. கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை
காங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.