தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Kerala records 3215 cases of COVID-19 on Tuesday, 3013 cases through contact

கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 3,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,14,033 ஆகும். இன்றைக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 89 பேர் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கும், 3,013 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 313 பேருக்கு எதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா பாதிப்புக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 466 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,532 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 82,345 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 31,156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.
2. கேரளாவில் மேலும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,139 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
4. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,988 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. கேரளாவில் வருகிற 14-ந் தேதி வரை கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
கேரளாவில் 14-ந் தேதி வரை கனமழை பெய்யும். எனவே மலையோர மக்கள் கவனமாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.