உலக செய்திகள்

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் -6, ஐபேட் அறிமுகம் + "||" + Apple Launches 'Affordable' Apple Watch SE, Series 6 With Blood Oxygen Monitoring: Live Updates

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் -6, ஐபேட் அறிமுகம்

பல்வேறு புதிய அம்சங்களுடன் ஆப்பிள் வாட்ச் -6, ஐபேட் அறிமுகம்
ஆப்பிள் ஈவென்ட்தான் உலகிலேயே அதிகம் கவனிக்கப்படும் டெக் நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

 ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் ஐபேட் போன்ற புதிய சாதனங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. 

அதேபோல், இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி ஆப்பிள் 'டைம் ஃப்ளைஸ்' என்ற பெயரில் முழுமையான டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நடத்தியது. இந்த ஆண்டில் 2-வது முறையாக நடைபெறும் இந்த நிகழ்வு முழுவதுமாக மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில்,   ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 - இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், ஃபேமிலி செட் அப் என்ற புதிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் மூலமாக சிறுவர்ககளுக்கும் கிட்ஸ் ஆப்பிள் வாட்ச் செட் அப் செய்து கொள்ளலாம். 

 புதிய ஆப்பிள் வாட்ச்  சீரிஸ் -6  ன் விலை 399 டாலர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.40,900- ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐபேட் 8th ஜென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது  முந்தைய பிராசஸரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இவைதவிர மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஐபேட்எஸ் 14 தளத்துடன் கிடைக்கிறது.

புதிய ஐபேட் 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு 399 டாலர்கள் என்றும் மாணவர்களுக்கு 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் முதல் முறையாக ”ஆப்பிள் நிறுவன” ஆன்லைன் ஸ்டோர்; விரைவில் திறக்கப்படுகிறது
இந்தியாவில் முதல் முறையாக ”ஆப்பிள் நிறுவன” ஆன்லைன் ஸ்டோர் திறக்கப்பட உள்ளது.
2. ஐஓஎஸ் 14 வெர்ஷன்- ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் வெளியீடு
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு முதல் முறையாக ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...