உலக செய்திகள்

ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு + "||" + India wins three elections to key UN bodies

ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பெரும்பான்மைக்கு தேவையான 28 வாக்குகளைப் பெற தவறிய சீனா தோல்வியைத் தழுவியது.
நியூயார்க், 

ஐ.நா. சபையின் 6 முதன்மை உறுப்புகளில் ஒன்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணைய குழு. 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆணைய குழுவின் நோக்கம் உலக பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்து, உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஒரு செயலாக்க திட்டத்தை வகுப்பது ஆகும்.

இந்த அமைப்பின், 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட நிலையில், ஆசிய பசிபிக் மாநிலங்கள் பிரிவில் 2 இடங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன.

இதில், பெண்கள் நிலைமை ஆணையத்துக்கான தேர்தலில் ஐ.நா தூதர் அடீலா ராஸ் தலைமையிலான ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா 38 வாக்குகளைப் பெற்றது.

ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பெரும்பான்மைக்கு தேவையான 28 வாக்குகளைப் பெற தவறிய சீனா தோல்வியைத் தழுவியது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்த உறுப்பினர் திருமூர்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்த வெற்றியானது பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கான அதிகாரமளிப்பையும் மேம்படுத்துவதற்காக, இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு கிடைத்துள்ள ஒப்புதல்” என குறிப்பிட்டுள்ளார்.