மாநில செய்திகள்

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - அமைச்சர் கே.பி.அன்பழகன் + "||" + 20 percent Additional places for student admission in Govt colleges

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - அமைச்சர் கே.பி.அன்பழகன்

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி - அமைச்சர் கே.பி.அன்பழகன்
அரசு கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கேபி அன்பழகன், தெரிவித்தார்.
சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, துணை கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, “வடசென்னையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாரதி மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. ஆண்டுக்கு 20 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை அங்கு உயர்த்தப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களையும் அதிகப்படுத்த வேண்டும், கூடுதல் கட்டிடங்களும் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதாக கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு அனைத்து அரசு கல்லூரிகளிலும் 20 சதவீதம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளிலும் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதல் கட்டிட வசதி வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பாதிப்பால் பணிகள் தாமதமாகியுள்ளன. விரைவில், இந்த பணிகள் முடிவடையும்” என்றார்.