தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலி + "||" + 8 policemen killed in one day for Corona in Marathaland

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலி

மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலி
மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 8 போலீசார் பலியாகி உள்ளனர்.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடி வரும் போலீசாரை கொரோனா தொற்று வேகமாக துரத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 371 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 756 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஒரேநாளில் 8 போலீசார் கொடிய கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். எனவே பலியான போலீசாரின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. இதில் 20 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவர்.

பாதிக்கப்பட்ட போலீசாரில் 15 ஆயிரத்து 830 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர். இன்னும் 3 ஆயிரத்து 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.12 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மாணவனை தெரிந்தே பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே தங்களது மகனை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.