மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்புஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு + "||" + Posters that is boasted TN cm EPS Tears in Theni

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்புஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்புஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் சம்பந்தமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக சித்தரித்தும், நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரில் “எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்” என்ற தலைப்பில் அரசின் சார்பில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பட்டியலிடப்பட்டு இருந்தது.

போஸ்டர் கிழிப்பு

மேலும் “மக்களின் முதல்-அமைச்சர் எடப்பாடியாரை குறை சொல்லக் கூடாது”, “மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி” போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதுதவிர அதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரின் படங்களும் இருந்தன.

இதற்கிடையே முதல்-அமைச்சருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட அந்த போஸ்டர், ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டது. ஆனால் அவற்றை யார் கிழித்தார்கள் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை
விவசாயிகளுக்கு துரோகமிழைக்கும் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.
4. “கொரோனாவை பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை” சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டு
கொரோனாவை பற்றி அ.தி.மு.க. அரசு கவலைப்படவில்லை என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டினார்.
5. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம்-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொதுமக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.