உலக செய்திகள்

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா + "||" + China launches 9 satellites into space from ocean platform

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா
கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது.
பீஜிங், 

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைகோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 செயற்கைகோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
எல்லையில் பழைய சூழலை திரும்பக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
2. எல்லையில் சீன ராணுவம் ஊடுருவவில்லையா? மத்திய மந்திரி கருத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்
இந்திய-சீன எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய மந்திரி கூறியதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. சீனாவின் 3 கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.
5. டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சி தோல்வி: மைக்ரோசாப்ட் நிறுவனம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தோல்வி டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.