உலக செய்திகள்

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து + "||" + Trump presides as Israel, UAE and Bahrain sign historic pacts

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
வாஷிங்டன், 

இஸ்ரேல் உடன் மத்திய கிழக்கின் இரண்டு முக்கியமான நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மற்றும் பக்ரைன் ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. 

வெள்ளை மாளிகையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஜியாத் நெஹ்யான், பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் ஜியானி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

முன்னதாக இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக், சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான ஐக்கிய அமீரகம் அதில் இணைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.
2. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகிறது
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தம் வருகிற 18-ந் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளது - டிரம்ப் சொல்கிறார்
இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
4. அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு கொண்டதாக ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
5. இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது
இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்தது.