தேசிய செய்திகள்

"அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை" - வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் பதில் + "||" + There is no intention to amend the Official Languages Act Union Minister Nithiyananda Roy answers Vaiko's question

"அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை" - வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் பதில்

"அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை"  - வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் பதில்
அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. 

அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்றும் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று கூறினார்.