தேசிய செய்திகள்

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர் + "||" + Amid LAC standoff, govt denies any infiltration along India-China border during last six months

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
புதுடெல்லி

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் ஏற்படவில்லை என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ  அளித்துள்ள பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி இருப்பதாவது:-

பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஊடுருவல்  சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நான்கு பேர் மார்ச் மாதத்தில், ஏப்ரல் மாதம் 24, மே மாதம் 8 மற்றும் ஜூலை மாதம் 11 பேர் ஊடுருவி தோல்வி அடைந்து உள்ளனர்.கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் ஏற்படவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 80,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. எல்லையில் அசாதாரண சூழல் தொடர்கிறது: இந்திய விமானப்படை தளபதி
எல்லையில் அசாதாரண சூழல் தொடர்வதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...