உலக செய்திகள்

ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை + "||" + Russia to sell COVID-19 vaccine to India's Dr. Reddy's Laboratories

ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை

ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை
ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாஸ்கோ: 

உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷியா தான். பல மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்ட வேகம் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர. நுட்பமான சில விஷயங்களை பரிசோதனை செய்யாமல் இதனை பயன்பாடுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தன.

இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுவிட்டதாக கடந்த மாதம் விளாடிமர் புதின் தெரிவித்து இருந்தார். தனது மகள்களில் ஒருவருக்குக் கூட அந்த தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

ஸ்பூட்னிக் வி என்ற அந்த தடுப்பூசிக்கு இரண்டு பரிசோதனைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தது.

தலா 38 மருத்துவ தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மிகவும் பொதுவான பக்க விளைவுகளாக தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை இருந்தன

தற்போது ரஷியாவில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

இந்த நிலையில் ரஷியாவின் தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது.

இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என்று ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி
நல்ல செய்தி! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனை விரைவில் இந்தியாவில் மீண்டும் தொடங்கப்படலாம்.
2. கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது சவாலான விஷயம்- ஆய்வில் தகவல்
கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பது பெரும் சவாலான விஷயம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி; மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தகவல்
அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறினார். தடுப்பூசி போடுவதற்கான முன்னுரிமை பட்டியலை மாநிலங்களிடம் பெற திட்டமிட்டுள்ளது.
4. 2022-ம் ஆண்டில்தான், தரமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும்; நிபுணர்கள் கணிப்பு
2022-ம் ஆண்டில்தான் தரமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தடுப்பூசி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
5. கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை: கமலா ஹாரிஸ் சொல்கிறார்
கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.