சினிமா செய்திகள்

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் + "||" + lokesh kanagaraj kamalhaasan film EvanenRu ninaithi

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை

கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  கமல்ஹாசனை இயக்குகிறார். கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார். அதனை தொடர்ந்து அவர் யாருடன் கூட்டணி சேர இருக்கிறார் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருந்தது. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனது அடுத்த படத்திற்காக லோகேஷ் கூட்டணி சேர உள்ளார் என சில மாதங்களாகவே கூறப்பட்டு வரும் நிலையில், அது பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருந்த ட்விட்டில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ்  கமல்ஹாசனை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல் பிரசாரம்: ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் நாளை தொடங்குகிறார்
சட்டசபை தேர்தல் பிரசாரம்: ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து கமல்ஹாசன் நாளை தொடங்குகிறார்.
2. சட்டப்பேரவை தேர்தல்: கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கமல்ஹாசனை சந்திப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்துள்ளார்.
3. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்:கமல்ஹாசன்
தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
4. சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றம்
சேலையில் சன்னி லியோன் அசத்தல் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்.
5. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந் தேதி முதல் விருப்ப மனு கமல்ஹாசன் அறிவிப்பு
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்கி விட்டோம்.