மாநில செய்திகள்

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு + "||" + Tirupati YSR Congress MP Durga Prasad Rao who was receiving corona treatment dies in Chennai

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் சென்னையில் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.
சென்னை,

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக இன்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.

இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
2. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தடை
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அனுமதிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து விற்பனைக்கு அனுமதி
ரஷ்யாவில் கொரோனா வைரசால் லேசான மற்றும் மித அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் முதல் மருந்து விற்பனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.
4. கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
5. ஆந்திராவில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை வசதிக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.