சினிமா செய்திகள்

சினிமாத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; போலி உலகம் -கங்கானா ரனாவத் + "||" + Kangana Ranaut tells Kunal Kamra to 'be someone who means something to this nation' after latter questions Y-security

சினிமாத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; போலி உலகம் -கங்கானா ரனாவத்

சினிமாத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது; போலி உலகம் -கங்கானா  ரனாவத்
விளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கங்கானா ரனாவத் கூறி உள்ளார்.
புதுடெல்லி 

நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான ரவி கிஷன், ''இந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இவர்களின் துணைகொண்டு செயல்பட்டு இந்திய இளைஞர்களை நாசமாக்குவதாகவும்'' குற்றம் சாட்டினார்.

இது குறித்து ராஜ்யசபையில் பேசிய ஜெயாபச்சன் சினிமா பிரபலங்களை தொடர்ந்து வசைபாடுவதை தடுக்க வேண்டும். சினிமா மூலம் புகழ் பெற்றவர்கள் அந்த துறையையே அவதூறாக பேசி வருகின்றனர். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அசிங்கப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் பல திரைப்பிரபலங்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துகளைக் கண்டு தான் வருந்துவதாகவும், திரைத்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என கூறினார்.

அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

கங்கனாவின் பெயரைக் குறிப்பிடவில்லையென்றாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கங்கனா, ஜெயாபச்சனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது டுவிட்டரில் இது குறித்து கருத்து வெளியிட்டு உள்ள கங்கானா ரனாவத் கூறி இருப்பதாவது:-

பொழுதுபோக்குத் துறை அதிக நச்சுத்தன்மை கொண்டது. விளக்குகளும், கேமராவும் நிறைந்திருக்கும் இந்த போலி உலகம், மாற்று யதார்த்த உலகம் என்ற ஒன்று இருப்பதாக ஒருவரை நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாயையைப் புரிந்து கொள்ள, மிக வலிமையான ஆன்மிக மனத்தால் மட்டுமே முடியும்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார். தான் கண்ணாடியைப் பார்த்து லிப்ஸ்டிக் அணிந்து கொள்ளும் புகைப்படம் ஒன்றை இதனுடன் பகிர்ந்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்"- நடிகை கங்கனா ரனாவத்
மும்பையில் என்ன நடக்கிறது என்று "கடவுளுக்குத் தெரியம்" என நடிகை கங்கனா ரனாவத் டுவிட் செய்து உள்ளார்.
2. போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு
நடிகர் சல்மான்கானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என அவரது சட்டக்குழு மறுத்து உள்ளது.
3. தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை
தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுனுள்ளது.
4. கங்கனா ரனாவத் தாகூர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு - காங்கிரஸ்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத்‘தாகூர்’ பிரிவைசேர்ந்தவர் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்து உள்ளார்.
5. "மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" - கங்கனா ரனாவத் சவால்
9 ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கனா ரனாவத் சவால் விடுத்து உள்ளார்.