உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் + "||" + Gaza rockets, Israeli air strikes accompany Israel-Gulf pacts

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.
ஜெருசலேம், 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள காசா முனை பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தை குறிவைத்து தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா நகரில் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆஸ்டூட் நகர் மீது நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி தளம் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவற்றின் மீது போர் விமானம் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.


தொடர்புடைய செய்திகள்

1. இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
இஸ்ரேல், யு.ஏ.இ., பக்ரைன் இடையே டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
2. தே.மு.தி.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சுக்கு பழிக்கு பழியாக தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
பெரும்பாக்கத்தில் தே.மு.தி.க. பிரமுகர் மீது வெடிகுண்டு வீசியதற்கு பழிக்கு பழியாக தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் அமைதி ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகிறது
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தம் வருகிற 18-ந் தேதி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
4. இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளது - டிரம்ப் சொல்கிறார்
இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா இணைய வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
5. அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு :ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
அலுவலக காரில் பெண் ஒருவருடன் உறவு கொண்டதாக ஐநாவின் இரண்டு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.