தேசிய செய்திகள்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல் + "||" + Before Moscow pact, Indian and Chinese troops fired 100-200 rounds on Pangong north bank

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்

கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டன -புதிய தகவல்
கிழக்கு லடாக்கில் சீன துருப்புகள் துப்பாக்கியால் சுட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி, -

கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரையில், இந்தியாவின் முன்னேறிய நிலையை நோக்கி சீன துருப்புகள் கடந்த வாரம் முன்னேறின. ‘பிங்கர்-4’ என்ற மோதல் பகுதியில் நடந்த இந்த அத்துமீறல் முயற்சியை அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

அதைத் தொடர்ந்து, ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் வந்த சீன துருப்புகள் பின்வாங்கி திரும்பிச் சென்றன. அப்போது அவர்கள் இந்திய படை வீரர்களை அச்சுறுத்துவதற்காக 100-200 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதை நேரில் கண்ட வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. சீனாவின் இந்த அத்துமீறல், மாஸ்கோவில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்பு நடந்ததாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. திபெத் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு
திபெத் விவகாரங்கள் முற்றிலும் எங்கள் நாட்டின் உள்விவகாரம் என சீனா தெரிவித்துள்ளது.
2. சீனாவின் "போக்கிரி" அதிகாரிகளால் தொடர்ந்து மிரட்ட முடியாது தைவான் சொல்கிறது
சீனாவின் "போக்கிரி" அதிகாரிகளால் தொடர்ந்து மிரட்ட முடியாது என்றும் உலகெங்கிலும் தனது தேசிய தினத்தை தொடர்ந்து கொண்டாடும் என தைவான் கூறி உள்ளது.
3. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
4. இதை செய்ய வேண்டாம் கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கனடாவிற்கான சீன தூதர் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. கொரோனாவுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா உள்பட அனைத்துநாடுகளையும் சீனா முந்தும்! அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்
சர்வதேச அளவில் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் தற்போது மீண்டெழுந்து வருகின்றது. இந்நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை விட அதிகமான இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.