மாநில செய்திகள்

வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார் + "||" + First Minister Palanisamy today inaugurated the Vandalur and Pallavaram Mem bridges

வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
வண்டலூர், பல்லாவரம் மேம்பாலங்களை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை, 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 

இதேபோல பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி. சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை ஆகிய சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு வண்டலூர் மேம்பாலத்தையும், தொடர்ந்து 11 மணிக்கு பல்லாவரம் மேம்பாலத்தையும் திறந்துவைக்கிறார்.

முன்னதாக காலை 9.50 மணிக்கு முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மாலை 4.30 மணிக்கு நபார்டு வங்கியின் தலைவர் ஜி.ஆர்.சிந்தாலாவை தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வண்டலூர் தாலுகாவில் 55 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு
வண்டலூர் தாலுகாவில் 55 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறக்கப்பட்டது.