தேசிய செய்திகள்

சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - மாயாவதி அறிவிப்பு + "||" + We will support India on the issue of Chinese aggression Mayawati announcement

சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - மாயாவதி அறிவிப்பு

சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - மாயாவதி அறிவிப்பு
சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, சீனாவின் லடாக் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், பகுஜன் சமாஜ் இந்தியாவின் செயல்பாட்டிற்கு முழு ஆதரவளிக்கும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர், தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

“இந்திய எல்லையில் நடந்து வரும் சீனாவின் அத்துமீறல் மோதல்கள், பதற்றம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஆர்வமும், அக்கறையும் வருவது இயல்பானது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனாவுக்கு சரியான பதிலளிக்கும் என்று பகுஜன் சமாஜ் நம்புகிறது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அரசு மற்றும் ராணுவத்தின் பக்கம் பகுஜன் சமாஜ் முழு ஆதரவுடன் துணை நிற்கும்.”

இவ்வாறு அவர் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.