மாநில செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து + "||" + Tamil Nadu Chief Minister and Deputy Chief Minister congratulated Prime Minister Narendra Modi on his birthday

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், “ஒரு அற்புதமான ஆண்டிற்கான, இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளுக்கான எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நம் தேசத்திற்கு சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் இறைவன் அளிக்க வேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில், “எங்கள் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடிஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்வதற்கான அவரது இலக்கில், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
2. பிரதமர் நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
3. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
4. பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.