தேசிய செய்திகள்

அதிக காத்திருப்போர் உள்ள தடங்களில் ஜோடி ரெயில்கள் அறிமுகம் - 21-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது + "||" + Introduction of paired trains on tracks with high waiting Operating from the 21st

அதிக காத்திருப்போர் உள்ள தடங்களில் ஜோடி ரெயில்கள் அறிமுகம் - 21-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது

அதிக காத்திருப்போர் உள்ள தடங்களில் ஜோடி ரெயில்கள் அறிமுகம் - 21-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது
அதிக காத்திருப்போர் உள்ள தடங்களில் ஜோடி ரெயில்களை 21-ந் தேதி முதல் இயக்குவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

ரெயில்களில் அனைத்து டிக்கெட் பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் நிரம்பி வழியும் நிலையில் உள்ள தடங்களில் செப்டம்பர் 21-ந் தேதி முதல் ஜோடி ரெயில்களை (நகல் ரெயில்) இயக்குவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. 

இந்த ஜோடி ரெயில்கள் வழக்கமான ரெயிலுக்கு சற்று முன்னதாக புறப்பட்டு, அதே வழிதடத்தில் செல்லும். இதற்கு முன்பு இயக்கப்பட்டுள்ள 230 சிறப்பு ரெயில்களுடன் கூடுதலாக இந்த ஜோடி ரெயில்கள் இயக்கப்படும். சிறப்பு ரெயில்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் டிக்கெட் உறுதி செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்காக அதிக தேவை உள்ள தடங்களில் இந்த ஜோடி ரெயில்கள் முறை அமலுக்கு வருகின்றன.

ஜன சதாப்தி ரெயிலுக்கு இணையான ஜோடி ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயில் எண் 04251/04252 லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு செப்டம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது. 

21-ந் தேதி முதல் ரெயில் ஓடத்தொடங்கும். இந்த ஜோடி ரெயில்களில் 10 நாட்களுக்கு முன்பிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். சிறப்பு ரெயில்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஜோடி ரெயில்களின் நிறுத்தங்கள் குறைவாக இருக்கும். பல ரெயில்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. டெல்லி மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு பல ஜோடி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தென்னிந்தியாவிற்கு எந்த ஜோடி ரெயிலும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.