உலக செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க கோரிக்கை + "||" + U.S. asks World Court to dismiss Iran sanctions case

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க கோரிக்கை

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க  கோரிக்கை
பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை கேட்டுக்கொண்டனர்.
தெக்ரான்

ஐக்கிய நாடுகள் சபையில் மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க கோரியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.

இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது, அதில். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் லட்சக்கணக்கான மக்களை கொல்கிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2018 ஆம் ஆண்டு நடந்த உடன்படிக்கையை அமெரிக்கா மீறுகிறது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இரு தரப்பு வாதங்களை இவ்வாரம் சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது.

பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை திங்கள்கிழமை கேட்டுக்கொண்டனர்.

வக்கீல் மாரிக் ஸ்ட்ரிங், 1955 ஆம் ஆண்டு இருதரப்பு உடன்படிக்கை, மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விஷயத்தை ஈரான் தவறாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் சர்வதேச நீதிமன்றத்திற்கு (ஐ.சி.ஜே) செல்வதற்கான அடிப்படையாக தெஹ்ரான் குறிப்பிடுகிறது என கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து ‘‘அமெரிக்கத் தூதரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் ’’என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியது
இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
2. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.
3. லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - அமெரிக்கா
லடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
5. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன் ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாக சீனாவின் அச்சு ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டமிட்டு உள்ளது.