தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று + "||" + A further 93,337 people in India have contracted corona in the last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,247 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டி,  53 லட்சத்து 08 ஆயிரத்து 015 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 42 லட்சத்து 08 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 6 கோடியே 24 லட்சத்து 54 ஆயிரத்து 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 68,74 லட்சமாக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் புதிதாக மேலும் 54,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67.95 லட்சமாக அதிகரித்துள்ளது.