மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 5,516 people in Tamil Nadu have been confirmed with corona infection today

தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,41,993 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,811 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்று 996 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 1,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 12 பேர் சென்னையில் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,55,639 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,206 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,86,479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,703 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86,073 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 64.74 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின்
‘தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைவதற்கான காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’, என நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.