தேசிய செய்திகள்

மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல் + "||" + 10 killed, 19 rescued as building collapses in Maharashtra’s Bhiwandi

மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்

மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை

மராட்டிய மாநிலம் பிவாண்டியில் இன்று அதிகாலை பல தசாப்தங்களாக பழமையான மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியானார்கள் பலர் காயமடைந்தனர்.

மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மேலான்மை படை (என்.டி.ஆர்.எஃப்) நான்கு வயது சிறுவன் ஒருவனை  உயிருடன் மீட்டது. இடிபாடுகளுக்குள் இருந்து  29 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 10 பேர் இறந்துவிட்டதாகவும், 19 பேர் உயிருடன் இருப்பதாகவும் என்டிஆர்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிவாண்டி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்து உள்ளார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என 

அதுபோல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலம் அமராவதியில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்
மராட்டிய மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டத்தில் கொரோனா பரவல்அதிகமாக உள்ளதால் அங்கு ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. மராட்டிய மாநிலம் நந்தூர்பரில் நிகழ்ந்த பஸ் விபத்து: 5 பயணிகள் பலி; 35 பேர் காயம்
மராட்டியத்தில் 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 பயணிகள் பலியாகினர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
3. மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.