தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம் + "||" + Tablighi Jamaat assembly caused spread of Covid among many persons: Home ministry in Rajya Sabha

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி

மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத்ன  தொடர்பாக சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி,எழுத்துபூர்வமாக அளித்துளா பதிலில் கூறி இருப்பதாவது:-

கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் ஜமாத்தில் கொரோனா விதிகளை மீறி ஒன்றாகக் கூடியிருந்த 236 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். 2,361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.

டெல்லி அரசு கொரோனா விதிகளை முழுமையாக அமல்படுத்தி,பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால், மூடப்பட்ட ஒரு அரங்கிற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், சானிடைசர் இல்லாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியதும் ஒரு காரணமாகும்” எனத் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

1. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.
4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.