தேசிய செய்திகள்

2 ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை + "||" + 2G appeal case: Hearing in Delhi High Court today

2 ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2 ஜி மேல்முறையீட்டு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை,

2 ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இது பொது நலன் சார்ந்த வழக்கு, எனவே உடனடி விசாரணை தேவை என வாதிட்டார். 


இதனை தொடர்ந்து எதிர்தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கொரோனா காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.