மாநில செய்திகள்

ராமநாதபுரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி + "||" + 308 civil works worth Rs. 48 crore have been carried out in Ramanathapuram - Chief Minister Palanisamy

ராமநாதபுரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

ராமநாதபுரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
ராமநாதபுரத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த முதல்வர், ரூ. 70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.24 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 844 புதிய திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.


தொடர்ந்து, லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி உள்ளிட்ட 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல், திட்டங்கள் திறந்து வைப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடிமராமத்து திட்டம் மூலம் பருவகால மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது” என்று கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர் நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடிப்படை வசதி கோரி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அடிப்படை வசதி கோரி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ராமநாதபுரத்தில் மருத்துவ முறைகள் கலப்படத்திற்கு எதிர்ப்பு; டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மருத்துவ முறை கலப்படத்திற்கு எதிர்த்து ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. ராமநாதபுரத்தில் பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் கைது
ராமநாதபுரத்தில் பட்டாசு கடை உரிமம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை