தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை + "||" + Coronavirus update: PM to meet CMs of 7 states tomorrow; India records over 1 lakh recoveries in a day

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏழு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள  மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.  

கொரோனா போராட்டத்தில் நாடு ஒரு முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்தது. 
கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குண்மாகி உள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் அதிக ஒற்றை நாள் மீட்டெடுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 45 லட்சம் (44,97,867) ஆகும். இதன் விளைவாக மீட்பு விகிதம் 80.86 சதவீதத்தை எட்டியுள்ளது ”என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75,083 புதிய கொரோனா பாதிப்புகள்  மற்றும் 1,053 இறப்புகள் பதிவாகி உள்ளது.

மொத்த கொரோனா பாதிப்பு இப்போது 55,62,664 ஆக உள்ளது, இதில்  சிகிச்சையில்  9,75,861 பேர்  உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 88,935 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
2. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
3. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
4. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
5. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.