தேசிய செய்திகள்

மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை - அமைச்சர் முரளிதரன் தகவல் + "||" + Government recommends indefinite adjournment of states - Minister Muralitharan

மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை - அமைச்சர் முரளிதரன் தகவல்

மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரை - அமைச்சர் முரளிதரன் தகவல்
மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின. இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 7 மசோதாக்கள், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறின.

இந்நிலையில் மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அக்.1ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது
2. மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
3. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
4. மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் -பா.ஜனதா பரிசீலனை
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர ஆளும் பா.ஜனதா தரப்பு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.