தேசிய செய்திகள்

1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி + "||" + Coronavirus: States should assess the effectiveness of 1 or 2-day lockdowns, says PM Modi

1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி

1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி
1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 24 மணிநேரத்தில்  83,347 புதிய பாதிப்புகளுடன்  56 லட்சத்தை கடந்துவிட்டது, அதே நேரத்தில் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள  மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பிரதமர் மோடி 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடிபேசும் போது கூறியதாவது:-

பெரும்பாலான  கொரோனா தொற்றுகள் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால் பயனுள்ள தகவல்கள் அவசியம். அத்தகைய சூழ்நிலையில், வதந்திகள் உயரக்கூடும். சோதனை மோசமானது என மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதிலும் சிலர் தவறு செய்கிறார்கள்.

பயனுள்ள சோதனை, தடமறிதல், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தெளிவான தகவல்கள் ஆகியவற்றில் நமது கவனத்தை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
2. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
3. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
4. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
5. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.