மாநில செய்திகள்

புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு - உயர் கல்வித்துறை ஏற்பாடு + "||" + Students, professors and parents today asked for feedback on the new education policy - organized by the Department of Higher Education

புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு - உயர் கல்வித்துறை ஏற்பாடு

புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு - உயர் கல்வித்துறை ஏற்பாடு
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் ஆன்லைன் மூலம் இன்று கருத்து கேட்கப்பட இருக்கிறது.
சென்னை,

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய உயர் கல்வித்துறை சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளரும், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான ஆபூர்வா, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளை கேட்கிறது.

அந்தந்த பல்கலைக்கழகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
2. புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு
புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்: புதிய கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் - பிரதமர் மோடி
புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. புதிய கல்வி கொள்கை - 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
புதிய கல்வி கொள்கை தொடர்பாக 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்துகிறார்.
5. புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.