மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு + "||" + Permission to open first schools in Tamil Nadu from October 1 - Government of Tamil Nadu Announcement

தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, 

உலக  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாக தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்
தமிழகத்தில் இன்று மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.