மாநில செய்திகள்

சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு + "||" + 3 more special trains will run from Chennai - Southern Railway Announcement

சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் தற்போது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் (சென்னை- திருவனந்தபுரம், சென்னை - மசூரு, சென்னை- மங்களூரு) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்.27 ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா வைரஸ்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை
கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
3. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் மழைநீரை சேமிக்க ஏற்பாடு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவு
சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை-கண்ணங்கோட்டை நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழை தண்ணீரை நிரப்பி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
4. சென்னையில் இடியுடன் கூடிய கனமழை
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
5. சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் - 30 லட்சம் பேர் பங்கேற்பு
சென்னையில் 61,235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது இதில் 30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.