தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை + "||" + Another 7,855 people in Andhra Pradesh today have been diagnosed with corona - state health department

ஆந்திராவில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை

ஆந்திராவில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 7,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,54,385 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,558 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 69,353 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 8,807 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 5,79,474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திரத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் - ராமதாஸ்
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4. ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2 முதல் ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
5. கர்நாடகாவில் இன்று மேலும் 7,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று 7,542 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.