தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை + "||" + J&KAdvocate, TV panelist Babar Qadri shot dead by unidentified gunmen in

ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
புதுடெல்லி: 

ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் ஜம்மு காஷ்மீரின் பிரபல வக்கீலும் மற்றும் டிவி பேனலிஸ்டுமான  பாபர் காத்ரியை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பாபர் காத்ரியின் ஹவால் இல்லத்திற்குள் மாலை 6.25 மணியளவில் நுழைந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் 
வக்கீல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காத்ரி உடனடியாக ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவரை  இறந்துவிட்டதாக' அறிவித்தனர் என்று அந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாபர் காத்ரி  தொலைக்காட்சி விவாதங்களில் தோன்றியும், உள்ளூர் செய்தித்தாள்களுக்கான கருத்து பக்கங்களை எழுதியும் வந்தார்.

அவர் இறப்பதற்கு முன், தனக்கு எதிராக "தவறான பிரச்சாரத்தை" பரப்பியதற்காக பேஸ்புக் பயனருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜம்முவில் காவல்துறையினரை வலியுறுத்தி ஸ்கிரீன் ஷாட்டை டுவீட் செய்திருந்தார் 


தொடர்புடைய செய்திகள்

1. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்
மெகபூபா முப்தியின் தேசியக் கொடி குறித்த கருத்துக்கு பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.
2. காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தனர்
காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் முன் நேற்று சரணடைந்தனர். தங்கள் பெற்றோர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய ஒப்புக்கொண்டனர்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை சீரமைத்த இந்திய இராணுவம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியின் சேதமடைந்த கல்லறையை இந்திய இராணுவம் சீரமைத்து உள்ளது.
4. ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்
பண்டிகை காலங்களில் ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
5. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியானார்கள். 3 பேர்படுகாயம் அடைந்துள்ளனர்.