தேசிய செய்திகள்

உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி + "||" + Fit India Dialogue 2020: PM Modi reveals he makes nutritious parathas with drumsticks

உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி

உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் -  பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி

ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி ஆன்லைன் விவாதத்தில் பேசிய மோடி,

வாழ்க்கை முறைகளில் ஆரோக்கியமான உணவு என்பது ஒரு அங்கமாகி விட்டதால் தாம் மகிழ்ச்சி அடைகிறேன்
மேலும் உடல்தகுதி திறனுடன் இருக்க சிறிது கட்டுப்பாடு மட்டுமே போதுமானது.

பேராசை இல்லாமல் பிறருக்காக, தன்னலம் இன்றி உழைத்தால் ஒரு போதும் மனச்சோர்வு வராது என்றும், மாறாக தனி சக்தி கிடைக்கும்.

உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும்.

மஞ்சள் உள்ளிட்டவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவர், வாரம் இருமுறை தமது தாயாருடன் பேசுவதாகவும், அப்போதெல்லும் உணவில் மஞ்சள் சேர்க்க மறக்க கூடாது என தாயார் நினைவு படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதமரும் முருங்கைக்காயுடன் பராத்தாக்களை தயாரிப்பதற்கான தனது செய்முறையைப் பற்றியும் பேசினார், அவர்  வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுவதாகக் கூறினார்.

.ஃபிட் இந்தியாவுக்கான “Fitness ki dose, aadha ghanta roz என்ற வாசகத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 

கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, மிலிந்த் சோமன்,ஊட்டச்சத்து நிபுணர் ராஜிவ்தத் திவாகர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மோடியுடன் ஃபிட் இந்தியா விவாதத்தில் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் 3 முத்தான திட்டங்களை 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் மூன்று முத்தான திட்டங்களை அக்டோபர் 24 -ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
2. குஜராத்தில் ‘சீ ப்ளேன்’விமான சேவையை அக்.31-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத்தில் ”சீ ப்ளேன்” எனப்படும் விமானம் சேவையை அக்டோபர் 31ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
3. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக
நரேந்திர மோடி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.
4. மார்தோமா திருச்சபை தலைவர் மரணம்-பிரதமர் மோடி இரங்கல்
மார்தோமா திருச்சபை தலைவர் கணைய புற்று நோய் பாதிப்பால் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.
5. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் விரைவாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி வினியோகிப்பது எப்படி? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.