உலக செய்திகள்

கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்... + "||" + Like the rules for the corona ... the rules for another disease in 1665 ...

கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...

கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்

கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தவும், சுத்தமாக இருக்கவும்... இவை கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.

ஆனால், இதே விதிமுறைகள் அடங்கிய கையேடு ஒன்று லண்டனில் 1665ஆம் ஆண்டே வெளியாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆம், அந்த காலகட்டத்தில் பிளேக் என்னும் கொடிய கொள்ளை நோய் பரவிய நேரத்தில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

ஆச்சரியம் என்னவென்றால், இன்று கொரோனா பரவலைத் தவிர்க்க என்னென்ன விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அதே விதிமுறைகள்தான் அன்றும் பிளேக் நோயைத் தவிர்ப்பதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

10 பக்கங்கள் கொண்ட அந்த கையேடும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், உடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கவும், தெருக்களை நன்கு சுத்தம் செய்யவும் அறிவுறுத்துகிறது.

வெளிநாடுகளிலிருந்து நோய் பரவுவதைத் தவிர்க்க, வெளிநாட்டிலிருந்து வருவோர் 40 நாட்கள் தங்களை கப்பலிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அப்போது வாசனை திரவியங்கள் மற்றும் அத்திப்பழ மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் பிளேக் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்போது போரிஸ் ஜான்சன் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவித்துள்ள விதிமுறைகளைப்போலவே அந்த கையேட்டில் உள்ள விதிமுறைகளும் இருப்பது உண்மையாகவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
2. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
4. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது
5. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.