தேசிய செய்திகள்

தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு + "||" + Corona for 15 people in Dharavi - the number of patients rises to 194

தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு

தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்வு
தாராவியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,

தாராவியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் கண்டறியப்பட்ட நோய் பாதிப்பு கடந்த 9 நாட்களான இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. நேற்று இங்கு புதிதாக 15 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளனர். ஆகஸ்ட் மாத கடைசியில் 100-க்கும் குறைவானவர்களே தாராவியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தொடர்ந்து அதிகரித்துவரும் நோய் பாதிப்பால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த ஜூன் மாதம் முதல் தாராவியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவதை மாநகராட்சி நிறுத்திவிட்டது. இதேபோல தாதரில் புதிதாக 51 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை அங்கு 3 ஆயிரத்து 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகிமில் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 80 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.