உலக செய்திகள்

எந்த நிபந்தனையுமின்றி வடகொரியா அதிபரை சந்திக்க தயார்- ஜப்பான் புதிய பிரதமர் + "||" + Japan PM Yoshihide Suga says ready to meet Kim Jong-un without any conditions

எந்த நிபந்தனையுமின்றி வடகொரியா அதிபரை சந்திக்க தயார்- ஜப்பான் புதிய பிரதமர்

எந்த நிபந்தனையுமின்றி வடகொரியா அதிபரை சந்திக்க தயார்- ஜப்பான் புதிய பிரதமர்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை எந்த நிபந்தனையுமின்றி சந்திக்க தயராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ

ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறும் போது

ஜப்பான் பிரதமராக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

வடகொரியாவுடனான உறவை இயல்பாக்க ஜப்பான் தொடர்ந்து முயலும். இந்தச் சந்திப்பு இரு நாட்டு உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் உதவும். இதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளை ஆசியான் ஜப்பான் உச்சி மாநாட்டில் கடுமையாக விமர்சித்தது ஜப்பான்.இதன் காரணமாக வடகொரியா ஜப்பானுடன் மோதல் போக்கை பிடித்து வந்தது.

இந்நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1-ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15-ஆம் திகதி ஜப்பான் பிரதமராகப் பதவி ஏற்றார்.பதவி ஏற்றது முதல் சர்வதேச நாடுகளுடான உறவைப் பலப்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.
2. புத்தாண்டில் மக்களிடம் மன்னிப்பு கோரிய வடகொரியா தலைவர்
பொருளாதார முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்காக மக்களிடம் புத்தாண்டில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் மன்னிப்பு கோரினார்.
3. ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மை- வட கொரியா
ஐ.நா.அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மையாக உள்ளது என வட கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.
4. மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் முன்னாள் காதலி
மனைவி, சகோதரி மாயம்; வட கொரிய அதிபரின் அதிகார வட்டத்தில் கிம்மின் எஜமானி என்று பலரால் நம்பப்படும் முன்னாள் காதலி
5. சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்
சில நொடிகளில் அமெரிக்க நகரங்களை சாம்பல் ஆக்கக்கூடிய பீதியை கிளப்பும் வடகொரியாவின் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.