மாநில செய்திகள்

வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை + "||" + If the Tamil Nadu government does not oppose the agricultural law, you will be thrown in the dustbin of history - MK Stalin warns

வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

விவசாயிகளை வஞ்சித்து வருவதாக மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் வேளாண் சட்டத்தை தமிழக அரசு எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், “இன்றைய போராட்டங்களின் மூலமாக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு இருக்கிறது எனக் காட்டியிருக்கிறோம்!. தொடர்ந்து போராடுவோம்!

இதுவரையிலான அதிமுக அரசின் துரோகங்கள் போதும்; வேளாண் சட்டங்களுக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசும் இணைந்து எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
2. வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
3. வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
4. வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்
வேளாண் உபகரணங்கள் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலத்தை போன்று தமிழக அரசும் சட்டம் இயற்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-