தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி + "||" + Rahul Gandhi’s tractor rallies in Punjab rescheduled to Oct 4-6

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்கிறார்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்ளுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் கூறுகையில், “  மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல்காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார்” என்றார்.

ஏற்கனவே 3, 4, 5 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேரணி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர்  4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி தொடர் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்பு
ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு ஈேராட்டில் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார்.
2. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
3. எவ்வளவு நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ மத்தியபிரதேச பாலியல் பலாத்காரம் தொடர்பாக ராகுல் கேள்வி
இன்னும் எவ்வளவு நாளைக்கு பெண்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள போகிறோம்?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை தவிர; விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயார் நரேந்திர சிங் தோமர் தகவல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறது.
5. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.