மாநில செய்திகள்

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! பகவத் கீதை வரிகளை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவீட் + "||" + Deputy Chief Minister Panneer Selvam tweeted pointing out the lines of the Bhagavad Gita

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! பகவத் கீதை வரிகளை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவீட்

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! பகவத் கீதை வரிகளை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவீட்
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்! பகவத் கீதை வரிகளை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் டுவீட் செய்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.


வருகிற 7-ந் தேதி முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதிமுகவின் பெரும்பாலான அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

"தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என பதிவிட்டுள்ளார்.